Thursday, March 13, 2014

power iso v4.7 free keey!!

Power ISO v4.7 பதிப்பினை இலவசமாக முழுமையான பதிப்பாக
தருகிறேன். இவ் மென்பொருள் ழுலம் சீடி டிரைவ் போன்ற
மாதிரிமை உருவாக்கலாம் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். மற்றும் சில கணனி விளையாட்டுக்கள், மென்பொருட்கள் சீடி மூலம் செயற்படக் கூடியதாக வடிவமைக்கப் பட்டிருக்கும் ஆனால் நாம் என்னேரமும் சீடி மூலம் பாவித்தால் சீடியும் பழுதடையும் சீடி ரைவும்
பழுதடைந்து போகும். அதற்கான தீர்வுதான் இந்த Power ISO. சாதாரணமாக சீடி டிரைவ் போல செயற்படும். பலர் இதை பற்றி அறிந்திருந்தாலும் இதனை பணம் செலுத்தி வாங்கும் அளவுக்கு வசதி இல்லாமல் பயன் படுத்தாமல் இருப்பர். ஆனால் இதனை நாம் இலவசமாக தருகிறோம் இனி கவலை வேண்டாம்.

Wednesday, March 12, 2014

கம்ப்யூட்டர் சாவி பென்டிரைவ்!!!!!

 பென்டிரைவ்  கம்ப்யூட்டர் சாவி!!!!!



                              pendrive-as-key-for-computer





உங்கள் வீட்டின் பூட்டிற்கு சாவி இருப்பதைப் போல...உங்களுடைய காருக்கு சாவி இருப்பதைப் போல. உங்களுடைய பெட்டி, பீரோவின் பாதுகாப்பிற்கு பூட்டு-சாவி இருப்பதைப் போன்று உங்களுடைய கம்ப்யூட்டருக்கும் ஒரு பூட்டுச்சாவி இருந்தால்... நன்றாகத்தானே இருக்கும்.

உங்களுடைய கோப்புகளை எவரும் அணுக முடியாமல் பாதுகாக்கும் மென்பொருள் (Document Protection Software):

உங்களுடைய கோப்புகளை எவரும் அணுக முடியாமல் பாதுகாக்கும் மென்பொருள் (Document Protection Software): 


      இந்த மென்பொருள் உங்களுடைய கோப்புகளை உங்களைத்தவிர வேறு யாருமே பயன்படுத்த முடியாதபடி செய்கிறது. உங்களுடைய கோப்புகள், கணியில் இருந்தாலும் சரி... பென்டிரைவில் இருந்தாலும் சரி.. அல்லது சிடி, டிவிடி யில் இருந்தாலும் சரி.. எதில் நீங்கள் வைத்துக்கொண்டாலும், அந்தக் கோப்புகளை உங்களைத் தவிர வேறு யாராலும் பயன்படுத்த முடியாதபடி மென்பொருளின் ஒரு டிரைவை உருவாக்கி "பாஸ்வேர்ட்" கொடுத்து பாதுகாக்கலாம்.

கணக்குப் பார்க்க உதவும் Accounting Software:

கணக்குப் பார்க்கஉதவும் Accounting Software:



 இந்த மென்பொருள் சிறிய அளவிலான தொழில் செய்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஆரம்ப கட்ட தொழில் செய்யும் சிறிய நிறுவனங்களுக்கு (Small Company) மிகப் பொருத்தமானகவும், பயன்படுத்த எளிதானதாகவும் இருக்கும். 

1. உங்கள் கணினியைப் பற்றி முழுதாக அறிந்துகொள்ள!!!!

உங்கள் கணினியைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள இம்மென்பொருள் பயன்படும். அதாவது கணினியில் உள்ள புரோகிராம்கள், நிரல்கள் (codes), துணை நிரல்கள் (Supporting programs), இயக்கிகள் (Drivers), இணைப்புகள்(links), நீக்கிகள்(Uninstaller) ஆகியவற்றைப் பற்றிய தகவல்களை துல்லியமாக கண்டறிய பயன்படும்.

இம்மென்பொருள் சி.நெட் தளத்தில் தரவிறக்கம் செய்ய கிடைக்கிறது.

தரவிறக்கச் சுட்டி: http://download.cnet.com/System-Explorer/3000-2094_4-10784281.html

உலகின் நம்பகமான ஆண்ட்டி வைரஸ் மென்பொருள் Avast 2014!!!






                                    
   

உலகின் நம்பகமான ஆண்ட்டி வைரஸ் மென்பொருள் Avast 2014

வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் Avast new version 2014

கணினிப் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிப்பது வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்கள். வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் மட்டும் இல்லையென்றால் இன்றைய இணைய உலகமே அப்படியே ஸ்தம்பித்துவிடும். காரணம் அந்தளவிற்கு வைரஸ்கள் பெருகி, அனைவரின் தகவல்களையும் திருடி அல்லோகலப்படுத்திவிடுவார்கள் இணையத் திருடர்கள்.

இந்த Tips பாலோ பண்ணுங்க..உங்களோட கம்ப்யூட்டர் Repair ஆகாது..!


           


     உங்களுடைய கம்ப்யூட்டர் அடிக்கடி ரிப்பேர் ஆகி உங்களுக்கு டென்சன் ஏற்படுத்துகிறதா?

இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். ஒரு சில வழிமுறைகளை செயல்படுத்துவதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டர் அடிக்கடி ரிப்பேராகாமல் தடுக்கலாம். 

Tuesday, March 11, 2014

இணையத்தொடர்பு [Internet Connection] இல்லாதவேளையிலும் இணையத்தளங்களைப் பார்வையிடுவதற்கு...



           

நாம் பொதுவாக இணையத் தளங்களைப் பார்வையிடும்போது சில பக்கங்கள் மீண்டும் தேவைப்ப்படுமெனின் அதனை புக்மார்க் [BOOK MARK] செய்துவைப்பதுண்டு. ஆனால் Book Mark செய்யும் பக்கங்களை மீண்டும் பார்ப்பதற்கு இணையத் தொடர்பை ஏற்படுத்தினாலேயே அப் பக்கத்தினுள் நாம் செல்லமுடியும். இதற்காக நாம் அப் பக்கங்களை “Save Page As” என்பதை கொடுத்து சேமித்து[Save] வைப்பதுண்டு.
ஆனால் கல்வித்தளங்கள் அல்லது வேறு முக்கியமெனக் கருதும் வலைத்தளங்களின் பெரும்பாலான பக்கங்கள் அனைத்தும் எமக்கு அடிக்கடி தேவைப்ப்படுமெனின் அவ் வலைத்தளங்களின் எல்லாப் பக்கங்களையும் Save செய்து வைப்பதால் மீண்டும் நாம் அதனைப் பார்வையிடும்போது ஒவ்வொன்றாக Open செய்து பார்க்கவேண்டும். இது நேர விரையத்தையும் எரிச்சலையும் கூட எமக்குத் தரலாம்.

வலைப்பூவின் Side Bar இல் உள்ள படங்களுக்கு இணைப்புக் கொடுத்தல்.



             

Side Bar இல் உள்ள அனிமேஷன்(Animation)போட்டோக்களுக்கு எவ்வாறு இணைப்பு(Link)கொடுப்பது என்பதே இப்பதிவாகும். இது பற்றி பலரும் அறிந்திருந்தாலும் கூட நான் அறிந்த இவ்விடையத்தை வலைப்பூவுக்கு புதியவர்கள் சிலரின் வேண்டுகோளிற்கு அமைய பதிவிடுகின்றேன். தங்கள் தளத்தில் சரியாகப் பொருத்தியபின் பிடித்திருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

இதற்கு முதலில் போட்டோஷாப்(PhotoShop) இல்216pixels X 65pixels  எனும் அளவில் இணைப்பு கொடுக்கவேண்டிய தளத்துக்குரிய லோகோவைப்(Logo) பயன்படுத்தி விளம்பரப்பலகை(Banar) ஒன்றினை செய்துகொள்ளுங்கள்.
பின்னர் அதனை இணையத்தளத்தில் பதிவேற்றி(Upload) விரும்பினால் அனிமேஷன் படமாக மாற்றிக்கொள்ளுங்கள். பின்னர் இவ் “.gif” File இற்குரிய “Direct HTML Link” ஐ அத் தளத்திலிருந்து Copy செய்துகொள்ளவும்.

பின்னர்

All- in -One Software ஐ இலவசமாக பெற...

   
All- in -One  என்று பொதுவாக ஒன்றிலே பல தொழிற்பாடுகளை செய்யக்கூடிய இலத்திரனியற் சாதனங்களைத்தானே கேள்விப்பட்டோம். இதென்னவென்று கூட யோசிக்கலாம்.
ஆம். பொதுவாக கணனியில் இயங்குதளத்தை நிறுவியபின்னர் எமக்கு தேவைப்படுவது மென்பொருட்கள் அடங்கிய சிடியே. இதனை நாம் கடையிலிருந்தோ அல்லது நண்பர்களிடமிருந்தோ அல்லது அடிக்கடி இயங்குதளத்தை நிறுவுபவர்கள் எனின் சேகரித்தோ கூட வைத்திருக்கலாம். ஆனால் உங்களிடம் அவ்வாறு மென்பொருட்கள் ஏதும் போதியளவு இல்லாதவேளை இயங்குதளத்தை அழித்து மீண்டும் நிறுவவேண்டி ஏற்படும் சந்தர்ப்பத்தில் CD க்காக அலையவேண்டியதில்லை.
                                   


Google இல் இலகுவாக நமக்கு வேண்டியதைத் தேடுவதற்கு.!!!!!!!!



Google இல் இலகுவாக நமக்கு வேண்டியதைத் தேடுவதற்கு.



              நாம் எமக்குத் தேவையான இணையத்தளங்கள், பாடல்கள், படங்கள் போன்ற எந்தத் தகவல்களையும் இணையத்திலிருந்து பெற்றுக்கொள்ள நாம்Google, Yahoo, Bing போன்ற தேடியியந்திரங்களையே(Search Engine) பயன்படுத்துகின்றோம். இவற்றுள் நாம் பொதுவாக google ஐயே பயன்படுத்துவதுண்டு.



                    

தங்கள் கணணி இயங்க ஆரம்பிக்கும்போது பயனாளர்களுக்கு அறிவுறுத்தலை வழங்குவதற்கு....



தங்கள் கணணி இயங்க ஆரம்பிக்கும்போது பயனாளர்களுக்கு அறிவுறுத்தலை வழங்குவதற்கு....




              தலைப்பு சற்று புரியவில்லையா? என்ன குழப்பம்? கவலையை விடுங்கள்... அதாவது நீங்கள் உங்கள் சொந்தப் பாவனையில் உள்ள கணணியை உங்கள் நேரடிக் கண்காணிப்பின் கீழேயே பிறரைப் பயன்படுத்த அனுமதிப்பது வழமை. ஏனெனில் தாங்கள்; தங்கள் கணணிமேல் வைத்துள்ள கவனிப்பு மற்றும் அக்கறை போல் மற்றைய விருந்தாளிகள் வைத்திருக்க மாட்டார்கள் என்பது அனைவரும் தெரிந்ததே.

வலைப்பூவிற்கு எழுந்தமானமான Header Image ஐ உருவாக்குதல்.

                            
         


                உங்கள் வலைப்பூக்களில் எழுந்தமானமான அனிமேஷன்களைக் கொண்ட பல Widgetsகளை இணைத்து வலைப்பூவினை அழகுபடுத்தியிருப்பீர்கள். அதேபோல் உங்கள் வலைப்பூவின் Header Image ஆனது தனியொரு படமாக இல்லாமல் அடிக்கடி மாறுபடக்கூடிய விதத்தில் அமைந்தால் எவ்வாறிருக்கும் என எண்ணி Flash போன்ற பல மென்பொருட்களில் முயற்சித்தும் பார்த்திருப்பீர்கள். ஆனால் அதைவிட சுலபமாக எவ்வாறு நம்மிடம் இருக்கும் படங்களை வைத்து மாறுபடக்கூடிய Header Image ஐ உருவாக்கலாம் என்று இப்பதிவினூடாகப் பார்ப்போம்.

எளிய தமிழில் கணினி புத்தகங்கள்!!!!

விண்டோஸ் எக்ஸ்பீ
http://www.scribd.com/doc/3068477/Tamil-Computer-Book-Windows-XP

வலைப்பூவிற்கு எழுந்தமானமான Background Image ஐ உருவாக்குதல்.!!

வலைப்பூவிற்கு எழுந்தமானமான Background Image ஐ உருவாக்குதல்.



Add caption

                                    அலசல்கள்1000 இன் கடந்த பதிப்பிலே எவ்வாறு எழுந்தமானமாக மாறுபடக்கூடிய Header Image ஐ உருவாக்கலாம் என்று விரிவாக அலசியிருந்தேன். இப்பதிவினூடாக எவ்வாறு எழுந்தமானமாக மாறுபடக்கூடியBackground Image ஐ உருவாக்கலாம் என்று பார்ப்போம். இப் பதிவினை படிக்கமுன்னர் “எழுந்தமானமாக மாறுபடக்கூடிய Header Image ஐ எவ்வாறு உருவாக்கலாம்” என்ற பதிவை ஒருமுறை படித்துவிட்டு இப் பதிவைத் தொடரவும்.

Windows 8 Bootable USB Drive ஐ உருவாக்கல்...

                                  

            Windows 7, Windows 8இயங்குதளங்களானது பொதுவாக DVDவடிவிலேயே கிடைப்பதுண்டு. கணணியிலே இயங்குதளத்தை நிறுவ வேண்டிய சந்தர்ப்பத்தில் அக் கணணியிலே DVD Driveஇல்லாத சந்தர்ப்பங்களில் எவ்வாறு Windows 8 ஐ USB Drive மூலமாகத் Bootable USB Drive ஆகத் தயாரிக்கலாம் என்று இப் பதிவினூடாகப் பார்ப்போம்.


இதற்காக ஒரு மென்பொருளை Microsoft தளத்திலிருந்து நேரடியாக இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம். அத்துடன் இதற்காக 4GB அல்லது அதற்கு கூடிய USB Drive ஐ பயன்படுத்தவேண்டும்.

இப்போ உங்கள் USB Drive ஐ செருகியபின்னர் தரவிரக்கிய மென்பொருளை இயக்கிக் கொள்ளவும். இப்போ கீழ் காட்டியவாறு தோன்றும்.



இதிலே Browse என்பதை கிளிக் பண்ணி Windows 8 மென்பொருளின் “ ISO File ” என்பதை தெரிவு செய்யவும். பின்னர் Next என்பதைக் கிளிக் பண்ணவும்.
இப்போ USB Device என்பதை தெரிவுசெய்யவும்.



இப்போ நீங்கள் பயன்படுத்தப் போகும் USB Device ஐ தெரிவு செய்யுங்கள். பின்னர் Begin copying என்பதை கிளிக் பண்ணவும்.



இப்போ உங்கள் USB Device ஆனது Format செய்யப்பட்டு Windows 8 Bootable USB Drive தயாரிக்கப்படும்.



இப்போ 100% முடிவடைந்து Bootable USB Drive ஆனது தயரிக்கப்பட்டுவிடும். 


இப்போ My Computer ஐத் திறந்து அதிலே காணப்படும் USB Drive இல்RightClick செய்து தோன்றும் நிரலில் உள்ள Eject என்பதைக் கிளிக் செய்துUSB Drive பாதுகாப்பாக கழற்றிக்கொள்ளவும்.



இப்போ நீங்கள் DVD Drive இல்லாத கணனிகளில் Windows 8  இயங்குதளத்தை நிறுவுவதற்காக உங்கள் USB Drive ஐப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  

இலவசமாக பேக்ஸ் அனுப்ப உதவும் இணையதளங்கள்!!

Monday, March 10, 2014

அருகம்புல்!பயன் தரும் பச்சிலை ....

                                           



                   புகைப்படம்: பயன் தரும் பச்சிலை அருகம்புல்!

நம்மில் பலர் அருகம் புல்லை பூஜையறையில் வைத்து பயன்படுத்துவதுண்டு ஆனால் அருகம்புல்லின் மருத்துவப்பெருமை தெரிந்தவர்கள் நம்மில் எத்தனை பேர் உள்ளனர். நமது உடலில் ஊட்டச்சத்து பெருகவேண்டும் என்பதற்காக ஹார்லிக்ஸ் ஓவல்டின் போன்ற பல வகையான பானங்களை சாப்பிடுகிறோம். ஆனால் அருகம்புல்லே அற்புதமான ஊட்டச்சத்து மூலிகை என்பது நம்மில் பலருக்க தெரிந்திருக்காது. 

நல்ல தளிர் அருகம்புல்லை சேகரித்து நீரில் கழுகி நன்கு அரைத்து பசும்பாலுடன் சுண்டக்காய்ச்சி நாள்தோறும் இரவில் படுக்கச் செல்லும்முன் சாப்பிட்டு வந்தால் பலவீனமடைந்த உடல் தேறி நல்ல பலம் பெற்றுவிடும். வளர்ந்து வரும் குழந்தைகள் எளிதாக ஊட்டச்சத்து பெற இதே முறையை கையாளலாம். அருகம் புல்லை நீரிலிட்டு நன்கு காய்ச்சி அந்த நீரை பதமான சூட்டில் குடித்து வந்தால் இதய நோய்க்கு இதமளிக்கும். 

தீடீரென ஏற்படும் வெட்டு காயம் போன்ற ரண காயங்களுக்கு அரிவாள் மூக்கு என்று சொல்லப்படும் பச்சிலையையும் அருகம்புல்லையும் சம அளவாக எடுத்து அரைத்துக்கட்டினால் உதிரப்பெருக்கு உடனடியாக நின்றுவிடும். காயமும் வெகு விரைவில் ஆறிவிடும். அருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். 

அருகம்புல்லை பொடியாக்கி கடலை மாவுடன் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும். நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்னைகளுக்கு அருகம்புல்சாறு சிறந்த தீர்வாக உள்ளது. வாயுத் தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம். உடல் சூட்டையும் இது தணிக்கிறது. உடல் ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக உள்ளது. 

ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்தச் சோகை, ரத்த அழுத்தத்தையும் அது சீராக்குகிறது. அருகம்புல் சாற்றில் வைட்டமின் 'ஏ' சத்து உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது. குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம். யுனானி மருத்துவத்தில் அருகம்புல் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை முறையாக பதப்படுத்தி கிட்னி ஃபெயிலியர், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருந்தாகத் தரப்படுகிறது.


நம்மில் பலர் அருகம் புல்லை பூஜையறையில் வைத்து பயன்படுத்துவதுண்டு ஆனால் அருகம்புல்லின் மருத்துவப்பெருமை தெரிந்தவர்கள் நம்மில் எத்தனை பேர் உள்ளனர். நமது உடலில் ஊட்டச்சத்து பெருகவேண்டும் என்பதற்காக ஹார்லிக்ஸ் ஓவல்டின் போன்ற பல வகையான பானங்களை சாப்பிடுகிறோம். ஆனால் அருகம்புல்லே அற்புதமான ஊட்டச்சத்து மூலிகை என்பது நம்மில் பலருக்க தெரிந்திருக்காது.

பாலி (இந்தோனேசியா) ஹிந்துக்களின் சொர்க பூமி ...



               புகைப்படம்: பாலி (இந்தோனேசியா) ஹிந்துக்களின் சொர்க பூமி 

உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு தான் பாலி (BALI). இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள். 42 லட்சம் ஹிந்துக்களின் தாயகமாக பாலி விளங்குகிறது. ஒரு காலத்தில் ஹிந்து ராஜ்யமாக இருந்த இந்தோனேசியாவில், முஸ்லிம்களின் படையெடுப்பிற்கு பிறகு பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர். இஸ்லாமியர்கள் மஜாபஹிட் (Majapahit ) என்ற கடைசி ஹிந்து மன்னரை வீழ்த்திய பிறகு ஹிந்து மதத்தை விட்டு மாறாமல் இருந்த மக்கள் பாலிக்கு குடிபெயர்ந்தனர். 

பாலியை பற்றிய சுவாரசியமான தகவல்கள். 

1. இங்கே ஒவொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் ஒரு நாள் மௌன விரதம் கடைபிடிக்கபடுகிறது. Nyepi day என்று சொல்கிறார்கள். 2013ல் மார்ச் 12ம் தேதி இந்த மௌன தினம் வருகிறது. ஹிந்துகளின் பண்டிகை போன்ற அந்த நாளில் இந்தோனேசியா முழுவதும் விடுமுறை அளிக்கபடுகிறது. காலை 6 மணி முதல், மாலை 6 மணி வரை எந்த போக்குவரத்தும் இருக்காது. பன்னாட்டு விமான நிலையமான Denpasar (bali) விமான நிலையம் கூட மூடப்பட்டு இருக்கும். யாரும் பேசிக்கொள்ள மாட்டார்கள். வீட்டில் இருந்தபடியே தியானம் செய்வார்கள். 

2. பாலியில் உள்ள ஹிந்து கலாச்சாரம் இந்திய ரிஷிகளிடமிருந்து வந்தது தான். பாலி பள்ளிகளில் இன்றும் கூட ரிஷிகளை பற்றிய பாடங்கள் இருக்கின்றன. புராணங்களில் வரும் மார்கண்டேய, அகஸ்திய, பரத்வாஜ ரிஷிகளை பற்றி இந்தியாவில் யாருக்கும் தெரியாத நிலையில், இந்த ரிஷிகளை பற்றி பாலி குழந்தைகள் கூட தெரிந்து வைத்து இருக்கிறார்கள். 

3. பாலியில் ஆணுக்கும், பெண்ணுக்கும் தேசிய உடை 'வேஷ்டி' தான். எந்த ஒரு பாலி கோவிலுக்கும் வேஷ்டி அணியாமல் ஆணோ, பெண்ணோ உள்ளே செல்ல முடியாது. இந்தியாவில் கூட சில கோவில்களில்தான் பாரம்பரிய உடை கட்டாயமாக உள்ளது (குருவாயூர் போன்ற). ஆனால் பாலியில் அனைத்து கோவில்களிலும் நமது உடை அணிந்து தான் செல்ல வேண்டும். 

4. பாலியின் சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பு ரிஷிகள் உருவாகிய tri-hita-karana என்ற கோட்பாட்டின் படி தான் அமைந்துள்ளது. அதைதான் அவர்கள் தங்கள் வாரிசுகளுக்கும் சொல்லிக்கொடுக்கிறார்கள். Parahyangan - Pawongan - Palemahan என்று பொருள்படும். tri-hita-karana என்பது சமஸ்கிருதம். 

5. Trikala Sandhya என்பது சூரிய நமஸ்காரம். அணைத்து பாலி பள்ளிகளிலும் கட்டயாமாக மூன்று வேலை சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள். அதே போல மூன்று வேலையும் காயத்ரி மந்திரத்தை அவர்கள் பள்ளியில் சொல்லவேண்டும். பொதுவாக பாலி ரேடியோவில் மூன்று வேலை சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டிய நேரத்தில் அதை ஒலிபரப்புவார்கள். 
இந்தியாவில் சூரிய நமஸ்காரதிர்க்கு எதிர்ப்பு தான் வருகிறது. 5 வேலை நமாஸ் செய்ய சொல்வார்கள் போல. 

6. பாலி கோவில் பூசாரிகளின் சம்பளத்தை இந்தோனேசியா அரசாங்கமே கொடுக்கிறது. முஸ்லிம் மத நாடான இந்தோனேசியாவில் அனைத்து மத கோவில் பூசாரிகளின் சம்பளத்தை அரசே கொடுக்கிறது. ஆனால் இந்தியா மத சார்பற்ற நாடு, இருந்தாலும் முஸ்லிம்களுக்கு மட்டுமே ஹஜ் செல்ல பணத்தை வாரி இறைக்கின்றது. 

7. இந்தோனேசிய நாட்டின் மூதாதையர்கள் அனைவரும் ஹிந்துக்களே, அதனால் அவர்களின் பண்பாடுகளில் இந்திய கலாசாரமே அதிகம் கலந்துள்ளது. 

8. உலகில் அரிசி விளைவிக்கும் நாடுகளில் இந்தோனேசியா முக்கிய இடம் வகிக்கிறது, பாலி தீவு முழுவதும் அரிசி வயல்கள் தான் இருக்கின்றது. பாலி மக்கள் விளைந்த அரிசியை முதலில் ஸ்ரீ தேவி, பூதேவி (Shri Devi and Bhu Devi ) ஆகிய தெய்வங்களுக்கு தான் படைக்கிறார்கள். அனைத்து வயல்களிலும் இந்த இரண்டு தெய்வங்களும் கோவில் இருக்கும், விவசாயிகள் இந்த இரு தெய்வங்களை வணங்கிய பிறகு தான் விவசாய தொழிலுக்கு செல்வார்கள். 9ஆவது நூற்றாண்டிலேயே விவசாய மற்றும் நீர்பாசன விதிமுறைகளை ஹிந்து பெரியோர்கள் கற்றுகொடுத்து இருக்கிறார்கள். அதற்க்கு Subak System என்று பெயர். இங்கே நீர் பாசனம் முழுவதும் கோவில் பூசாரிகளின் கட்டுபாட்டில் தான் இருக்கும். உலக வங்கியே Subak System பின் பற்றுமாறு மற்ற நாட்டினருக்கு அறிவுரை வழங்கி உள்ளது குறிப்பிட தக்கது. இந்தியர்கள் கொண்டு வந்த இந்த விஞ்ஞானம் இன்று இந்தியாவில் இல்லை. 

9. பாலி ஹிந்துக்கள் பூஜை செய்யும் பொழுது பிரிண்ட் செய்யப்பட்ட புத்தகங்களை வாசிப்பது இல்லை. இன்றும் கூட அவர்கள் கையால் எழுதப்பட்ட ஓலை சுவடியையே (Lontar) பயன்படுத்துகிறார்கள். ராமாணயம் அனைவருக்கும் தெரிந்து இருக்கும்.ராமாணய ஓலைசுவடியை நல்ல நாட்களில் எடுத்து வரும் திருவிழா நடைபெறும். 

10. அனைத்து திருவிழாகளிலும் பாலி நடனம் ஆடுவார்கள், அதில் பெரும்பாலும் இராமாயண இதிகாசங்களை கதைகளாக சொல்வார்கள். ஹிந்துக்களின் சொர்க்க பூமி பாலி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

உலகின் அழகிய தீவுகளில் பாலி முக்கிய இடம் வகிக்கிறது. அழகிய இடங்கள், அமைதியான வாழ்க்கை முறை, பாரம்பரியமிக்க ஹிந்து கலாச்சாரம், நடனம், இசை என்று இந்த தீவு உலக சுற்றுலா பயணிகளை அதிகம் கவருவதில் ஆச்சிரியம் ஏதும் இல்லை. 

https://www.facebook.com/jananayagam - இதுதான் ஜனநாயகமா?



           உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு தான் பாலி (BALI). இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள். 42 லட்சம் ஹிந்துக்களின் தாயகமாக பாலி விளங்குகிறது. ஒரு காலத்தில் ஹிந்து ராஜ்யமாக இருந்த இந்தோனேசியாவில், முஸ்லிம்களின் படையெடுப்பிற்கு பிறகு பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர். இஸ்லாமியர்கள் மஜாபஹிட் (Majapahit ) என்ற கடைசி ஹிந்து மன்னரை வீழ்த்திய பிறகு ஹிந்து மதத்தை விட்டு மாறாமல் இருந்த மக்கள் பாலிக்கு குடிபெயர்ந்தனர். 

ஆண்மைக்குறைவு நீக்கும் கீரைகள்!!!!

                             






              புகைப்படம்: ஆண்மைக்குறைவு நீக்கும் கீரைகள்

நறுந்தாளி நன்முருங்கை தூதுளை பசலை 
வாளிளறு கீரை நெய்வார்த்துண்ணில் யாழிஎன 
விஞ்சுவார் போகத்தில் பெண்களெல்லாம் 
பின் வாங்கிக் கேள் 

இந்தியாவில் சுகாதாரத்துறை ஆய்வு கணக்கெடுப்பில் இன்றைய ஆண்களிடம் 75% வீதம் ஆண்மைக்குறைவு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

"கொக்கோகம்" என்ற காம சாஸ்த்திரத்தை முனிவர்களால் உருவாக்கப்பட்டு உலகிற்கு அளித்த நமது இந்தியாவில் இப்படி ஒரு நிலை,இன்றைய கலாச்சார சீரழிவு,மற்றும் past food எனப்படும் உணவு வகைகளாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்மைக் குறைவினால் பல குடும்பங்களில் கணவன் மனைவியிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி விவகாரத்து வரை செல்ல இதுவும் ஒரு காரணமாக உள்ளது. 

ஆண்மைக் குறைவைப் போக்கும் அற்புதமான வழிமுறைகளை சித்தர்கள் வகுத்து அளித்துள்ளனர். இவற்றுக்கான உணவுகள் மற்றும் மருந்து முறைகள் ஏராளமாக உள்ளது அதில் ஒரு முறைதான் மேலே உள்ள பாடலில் உள்ளது.

நறுந்தாளி என்பது தாளிக்கீரை ஆகும் 
நன்முருங்கை என்பது முருங்கைக்கீரை 
அடுத்து தூதுவேளை -பசலை கீரை -அரைக்கீரை 
இந்த ஐந்து வகை கீரைகளை பசு நெய் ஊற்றி சமைத்து உண்டு வர யாழி என்ற (பத்து சிங்கத்தின் பலம் கொண்டது) விலங்கின் பலம் உடலுக்கு கிடைக்கும் என சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவைகளை சமைத்து உண்டு அனைவரும் உடல் பலத்துடன் வாழலாமே!

ஆண்மைக்குறைவு நீக்கும் கீரைகள்

நறுந்தாளி நன்முருங்கை தூதுளை பசலை 
வாளிளறு கீரை நெய்வார்த்துண்ணில் யாழிஎன 
விஞ்சுவார் போகத்தில் பெண்களெல்லாம் 
பின் வாங்கிக் கேள் 

இந்தியாவில் சுகாதாரத்துறை ஆய்வு கணக்கெடுப்பில் இன்றைய ஆண்களிடம் 75% வீதம் ஆண்மைக்குறைவு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

உடல் பருமனைக் குறைக்க சில வழிகள்.....


                      புகைப்படம்: உடல் பருமனைக் குறைக்க சில வழிகள்

* இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு கரண்டி சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, கால...ையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol), ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும்.

* கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும்.

* சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தேனில் உண்ண உடல் எடை குறையும்.

* பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும்.

* எலுமிச்சைச் சாறு ஒரு கரண்டி சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது.

* நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், முதலியவற்றை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும். 

* சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்:தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, புரூகோலி, ஆப்பிள், ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர்.

* நீக்க வேண்டிய உணவுப் பொருட்கள்:இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள். தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.



உடல் பருமனைக் குறைக்க சில வழிகள்

* இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு கரண்டி சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, கால...ையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol), ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும்.

எவ்வளவு நாள் எந்தக்காயை பிரிட்ஜில் வைக்கலாம்?



                        
பழங்கள்:
திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள்
ஆப்பிள்கள் ஒரு மாதம்
சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள்
அன்னாசி (முழுசாக) 1 வாரம்
(வெட்டிய துண்டுகள்) 2-3 நாட்கள்

உடம்பை எப்படி குறைக்கலாம்?


  உடம்பை எப்படி குறைக்கலாம்? அதற்கான வழிமுறைகள்.....

   1. தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ளதை அடிப்படியான சதைகள் குறைந்து, உடல் அழகான வடிவத்திற்கு வந்துவிடும்.

2. அமுக்கிரா வேர், பெருஞ்சீரகம் ஆகியவற்றை பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்துவர உடல் எடை குறையும்.

உடல்நல நன்மைகள். . ஆச்சரியப்படுத்தும் சவுச்சவ்..!!!

                      உடல்நல நன்மைகள். . ஆச்சரியப்படுத்தும் சவுச்சவ்..!!!

                   புகைப்படம்: சவுச்சவ் ஆச்சரியப்படுத்தும் உடல்நல நன்மைகள். . .

சவுச்சவ் இதய நொய்யாளிகளுக்கு நல்லது, மற்றும் புற்றுநோய் வராமல் காக்கும்.

சவுச்சவ் பொதுவாக ஒரு காய்கறி போன்றே தயார் செய்ய படுகிறது என்றாலும், அது உண்மையில் ஒரு பழம் ஆகும். இதில் மிகவும் முறுமுறுப்பான சதை பற்று இருப்பதால் இதைல் சமைத்தும் சாப்பிடலாம், பச்சையாகுவும் சாப்பிடலாம்.

1. இதயத்திற்கு நல்லது. . .

(Homocystein) ஒரு அமினோ ஆஸிட் ஆகும், இது இரத்தத்தில் அதிகமா இருந்தால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன, இப்படிப்பட்ட அமினோ ஆஸிட் வளர்வதை 'B' விடமின் தடுக்கிறது. இந்த Folate எனப்படும் 'B' விடமின் சவுச்சவ்வில் நிறைந்து இருக்கிறது.

2.புற்றுநோயை தடுக்க உதவுகிறது(வைட்டமின் சி) . . .

வைட்டமின் சி, ஒரு சக்திவாய்ந்த ஆண்டி-ஆக்ஸிடெஂட்ஸ்(antioxidants) ஆகும். இந்த சாரம் நம் உடலில் ஏற்படும் திசு சிதைவுகளை சரிசேய்யும் அது மற்றும் இன்றி இந்த ஆண்டி-ஆக்ஸிடெஂட்ஸ் மெதுவாக அல்லது சாத்தியமான வகையில் புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. சவுச்சவ்வில் வைட்டமின் சி ஒரு நல்ல மூலமாகும், இது . 17% வழங்கும்.

3. உடலின் ஆற்றல்/சக்தி உற்பத்தியை அதிகரிக்கும் (Manganese). . .

சவுச்சவ் முட்டை போடிமாஸ்யை காலை உணவாக உன்ணுங்காள், நாள் முழுவதும் உங்கள் உடல் ஆற்றல் / சக்தியுடன் இருக்கும். இதில் மாங்கனீசு உள்ளடக்கம் அதிகம் உள்ளத்தால் அந்த நாளில் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் புரதம் மற்றும் கொழுப்பை எநர்ஜீ(Energy) ஆகா மாற்றும்.

4. மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது (Fiber). . .

குடல்பகுதியை முறைப்படுத்தி ஊக்குவிக்க, உங்கள் உணவில் சவுச்சவ்வை தினமும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

5. தைராய்டு(thyroid) ஆரோக்கியமாக வைத்திருக்கும் (Copper). . .

தைராய்டு வளர்சிதையை கட்டுப்படுத்தும் அயோடின்க்கு, தாமிரம்(Copper) உதவுகிறது. அயோடின் என்பது தைராய்டு வளர்சிதை பரிணாமத்துடன் சம்பந்தப்பட்டு இருக்கும் ஒரு தாது குறிப்பாக ஹார்மோன் உற்பத்தியில் மற்றும் உட்கிரகிப்பிற்கும்.

6. ஆண்மை அதிகரிக்க மற்றும் முகப்பரு தடுக்க உதவுகிறது (Zinc). . .

சவுச்சவ் துத்தநாகம்(.) ஒரு நல்ல மூலமாகும். தோல் எண்ணெய் உற்பத்தி கட்டுப்படுத்தும் ஹார்மோன்கலை ஊக்குவிக்கும். ஆண்மை அதிகரிக்க மற்றும் மலட்டுத் தன்மையை போக்கும்.

7. எலும்பு இழப்பு தடுக்க உதவுகிறது (Vitamin K). . .

உங்கள் வீட்டில் இருக்கும் வயதானவர்களை சவுச்சவ் சாப்பிட சொல்லுங்கள், அதில் இயற்கை வைட்டமின் கே இருக்கிறது. வைட்டமின் கே மற்றும் எலும்பு இடையே ஒரு தொடர்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

8. இரத்த அழுத்தம் குறைக்க உதவுகிறது (Potassium). . .

சவுச்சவ் உங்கள் உடலின் தினசரி படாஸீயம் தெவயை பூர்த்தி செய்யும், இந்த தாது இரத்த அழுத்த அளவுகளை குறைக்க உதவுகிறது.

9. மூளை வார்சிக்கு நல்லது (Vitamin B6). . .

ஆய்வின் பங்கேற்பாளர்கள் சில குறிப்பிட்ட வயதில் உள்ளவர்களுக்கு மூளை நினைவக திறனை ஊக்குவிக்கும் என்று நம்புகிறார்கள்

10. கால் தசைப்பிடிப்புக்கலை தடுக்க உதவுகிறது (Magnesium). . .

ஒரு எலக்ட்ரோலைட் மற்றும் கனிமம் தசைப்பிடிப்புப்பை தடுக்கும் உதவும்.


      சவுச்சவ் இதய நொய்யாளிகளுக்கு நல்லது, மற்றும் புற்றுநோய் வராமல் காக்கும்.

சவுச்சவ் பொதுவாக ஒரு காய்கறி போன்றே தயார் செய்ய படுகிறது என்றாலும், அது உண்மையில் ஒரு பழம் ஆகும். இதில் மிகவும் முறுமுறுப்பான சதை பற்று இருப்பதால் இதைல் சமைத்தும் சாப்பிடலாம், பச்சையாகுவும் சாப்பிடலாம்.

1. இதயத்திற்கு நல்லது. . .

சுண்டக்காயின் மருத்துவக் குணம்..!





                            புகைப்படம்: சுண்டக்காயின் மருத்துவக் குணம்..!

கசப்பான விசையங்கள் என்றும் வாழ்கையில் நல்ல விசையமாக இருக்கு ...

சுண்டைக்காய், கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என்று கசப்புடனும் கசப்பின்றியும் கிடைக்கின்றது. சுண்டக்காயை வாங்கி மோரில் ஊறவைத்து, வற்றலாகப் போட்டு வறுத்தும், குழம்பில் சேர்த்தும் சாப்பிடலாம். கசப்பு சுண்டைக்காய், கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளுக்கு நல்ல மருந்து ஒரு குடும்பத்தினருக்கு (5 பேர் அடங்கியது) வருடத்திற்கு 2 லிட்டர் கசப்பு சுண்டைக்காய் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர, கிருமித் தொந்தரவு இருக்காது அமிபீயாஸிஸ் போன்ற கிருமிகளையும் சுண்டைக்காய் விரட்டி விடும். நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் சுண்டைக்காய் கிருமிகளை ஒழிக்கும் சுண்டைக்காய்

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது.

சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தில் உள்ள வைட்டமின்கள், குளுக்கோசைடுகள் போன்ற பல வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. டார்வோனின் ஏ, டார்வோனின் பி, பேனிகுனோஜெனின், டார்வோஜெனின் போன்றவை காணப்படுகின்றன.

சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம்.

சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.

சுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இருவகை உண்டு. மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது மலைச்சுண்டை. இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகிறது.

வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக் காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்கள் இவற்றை போக்கும். மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும்.

சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். சுண்டைக்காயுடன், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து கஷாயம் செய்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்து வருவது நல்லது.

முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். இது மார்புச்சளியைப் போக்கும். குடலில் உள்ள அசடுகளை நீக்கும்.

சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.

சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும்.

இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.

மருத்துவக் குணங்கள்:

பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி வெளியேறும்.
சுண்டைக் காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து உணவில் இரவில் பயன்படுத்தி வர மார்புச் சளி, இரைப்பிருமல் (ஆஸ்துமா), காச நோய் குணமாகும். வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.

சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம் பருப்பு, கறிவேம்பு, சீரகம் சம அளவாக எடுத்து வறுத்து இடித்துப் பொடியாக்கி 2 வேளை ஒரு சிட்டிகையளவு 1 டம்ளர் மோரில் கலந்து குடித்து வர பேதி, மூலம், பசியின்மை, மார்புச் சளி குணமாகும்.

சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம், சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் 3 வேளை சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் குணமாகும்.
சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் புளித்த மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி எடுத்து உணவுடன் உண்டு வர நீரிழிவு நோய் தணியும்.

சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாங்கொட்டை பருப்பு, ஓமம், நெல்லி வற்றல், மாதுளை ஓடு, வெந்தயம் சம அளவாக எடுத்து தனித்தனியே இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து 5 கிராம் பொடியை 2 வேளை 1 டம்ளர் மோருடன் கலந்து சாப்பிட தீக்குற்றத்தால் உண்ட சுவையின்மை, வயிற்றுப் புழு, நிலைக் கழிச்சல், சீதக் கட்டு நீங்கும். இதையே மார்பு சளி செரியாக் கழிச்சல், மூலம், நீரிழிவு இவற்றிற்கும் சாப்பிட கட்டுப்படும்.

சுண்டைக் காயை சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வறுத்து, உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை பொடித்துப் போட்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலம், மந்தம், செரியாமை குணமாகும்.
சுண்டைக்காய் வேர்ப் பட்டையை பொடி செய்து தேங்காய்க் குடுக்கையில் வைக்க வேண்டும். இதனை ஒரு சிட்டிகை மூக்கிழுக்க, தலை நோய், நீரேற்றம், மண்டைக் குடைச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர்ப்பாய்தல் நீங்கும்.

சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பை பிண்ணாக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடி செய்து முகர இழுப்பு நோய் தணியும்.
சுண்டை வேர் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வலிகாய்ச்சல் குணமாகும்.


சுண்டக்காயின் மருத்துவக் குணம்..!

கசப்பான விசையங்கள் என்றும் வாழ்கையில் நல்ல விசையமாக இருக்கு ...

சுண்டைக்காய், கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என்று கசப்புடனும் கசப்பின்றியும் கிடைக்கின்றது. சுண்டக்காயை வாங்கி மோரில் ஊறவைத்து, வற்றலாகப் போட்டு வறுத்தும், குழம்பில் சேர்த்தும் சாப்பிடலாம். கசப்பு சுண்டைக்காய், கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளுக்கு நல்ல மருந்து ஒரு குடும்பத்தினருக்கு (5 பேர் அடங்கியது) வருடத்திற்கு 2 லிட்டர் கசப்பு சுண்டைக்காய் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர, கிருமித் தொந்தரவு இருக்காது அமிபீயாஸிஸ் போன்ற கிருமிகளையும் சுண்டைக்காய் விரட்டி விடும். நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் சுண்டைக்காய் கிருமிகளை ஒழிக்கும் சுண்டைக்காய்

அல்சர் குணமாகும் பீட்ரூட் ஜூஸ்:

                                       அல்சர் குணமாகும் பீட்ரூட் ஜூஸ்:

                                            புகைப்படம்: பீட்ரூட் ஜூஸ்:


* பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

* பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

* பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

* கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக்.

* பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.

* தலையில் ஏற்படும் வெள்ளை நிற பொடுகுகளைக் களைய பீட்ரூட் ஜூஸை பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ் செய்து இரண்டு மணிநேரம் கழித்து சீயக்காய் பவுடர் கொண்டு தலை குளித்தால் நாளடைவில் பொடுகுகள் சரியாகும்.

* புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட்.

* பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.

* புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.


                * பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

* பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்

மனம் இருந்தால் மார்கம் உண்டு...!!!


                   புகைப்படம்: மனம் இருந்தால் மார்கம் உண்டு...
இப்படியும் காய்கறிகள் செடிகள் வளர்க்கலாம்...!

இந்தோனேசியாவில் இப்படி... செய்கிறார்கள். காய்த்தபின் வெட்டிப்போட்ட வாழைமரம் காய்வதற்கு வெகு நாட்களாகிவிடும். அதனுள் இருக்கும் நீரோ அளப்பரியது.

ஆதலால், இப்படி அதனைப பயன்படுத்திக் கொண்டால், நீரும் மிச்சம், இடமும் மிச்சம், நல்ல இயற்கை சத்தும் வளர்க்கப்படும் காய்கறிகள் செடிகளுக்குக் கிடைத்துவிடுகின்றன. அத்தோடு, பயிர்செய்கை முடிந்து வாழைமரம் காய்ந்தவுடன் அப்படியே அதனைப் பிளந்து உடன் எருவாகவும் பயன்படுத்தி விடலாம்.


tamilnadu



              மனம் இருந்தால் மார்கம் உண்டு...
இப்படியும் காய்கறிகள் செடிகள் வளர்க்கலாம்...!

வெங்காயம்!சிறுநீர் கற்களைக் கரைக்கும்!!!!!!!!!


                                புகைப்படம்: சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்!

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு' என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம்,

* முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.

* வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

* குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

* சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.

* யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

* முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.

* செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.

* சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.

* புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.

* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

* வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

* வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.

* வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

* அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

           வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு' என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம்,

நீரை சுத்தமாக்கும் வாழைப்பழம் !!!!!!!!

                                                  நீரை சுத்தமாக்கும் வாழைப்பழம் !


              புகைப்படம்: நீரை சுத்தமாக்கும் வாழைப்பழம் !

இனி குடிநீரை சுத்தம் செய்ய பியூரிபையர் போன்ற பொருட்கள் தேவையே இல்லை. வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..! ஆச்சர்யமாக இருக்கிறதா? குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரைவிட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சி யாளர்கள். இப்படி ஒரு விந்தையான ஆராய்ச்சியை பிரேசில் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோசின்சியாஸ் நிறுவனம் மேற்கொண்டது. குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான அந்தக் குழு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு இதோ...

‘‘சுற்றுச்சூழல் சீர்கேடு, நீர்நிலை களில் கலக்கும் மாசு மூலம் நீரில் காரீயம், செம்பு உள்பட பல உலோகங்களும், ரசாயனப் பொருட்களும் கலந்து நீர் குடிக்க முடியாக அளவிற்கு மாசடைந்து காணப்படுகின்றது. இப்படி மாசடைந்த நீரைப் பருகினால், உடல் நலன் பாதிப்பு நிச்சயம். மாசடைந்த நீரை சுத்தமாக்குவதில் பியூரிபையர் உள்பட பல பொருட்கள் நடைமுறையில் உள்ளன. வசதிபடைத்தவர்கள், ஓரளவு சம்பாதிப்பவர்கள் மட்டுமே இதுபோன்ற பொருட்களை பயன்படுத்த முடியும். ஏழைகள் இப்படி ஒரு பொருளை கற்பனை செய்து பார்க்க முடியாது. அதற்காகவே இந்த ஆய்வு.

ஏற்கனவே தேங்காய் நார் மற்றும் கடலைத் தோல் மூலம் நீரைச் சுத்தப்படுத்தும் முறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் சில்வர் பாத்திரங்கள் மற்றும் ஷூக் களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழத் தோலைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்த ஆய்வில் இறங்கினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

நீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால், அதில் உள்ள நச்சுக்கள் உடனடியாக குறைவதை ஆய்வில் கண்டோம். நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத் தோல் உறிஞ்சிவிடுகிறது. இதனால், 90 சதவிகிதம் அளவுக்கு நீர் சுத்தமாகிறது. பல கட்டங்களாக ஆய்வு செய்தே வாழைப்பழத் தோலுக்கு இப்படி ஒரு ஆற்றல் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம். நீரைச் சுத்தப்படுத்துவதில் இம்முறை சிறப்பானது. செலவும் குறைவு. ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன் படுத்தலாம்” என முடிகிறது ஆய்வறிக்கை.

இனி வாழைப்பழம் வாங்கினால், தோலைத் தூக்கி எறிய வேண்டாம். நீரில் போட்டு வையுங்கள். உலகிலேயே வாழைப் பழ உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்தியாவுக்கு இது இனிப்பான செய்திதானே?

நீரை சுத்தமாக்கும் வாழைப்பழம் !

இனி குடிநீரை சுத்தம் செய்ய பியூரிபையர் போன்ற பொருட்கள் தேவையே இல்லை. வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..! ஆச்சர்யமாக இருக்கிறதா? குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரைவிட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சி யாளர்கள். இப்படி ஒரு விந்தையான ஆராய்ச்சியை பிரேசில் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோசின்சியாஸ் நிறுவனம் மேற்கொண்டது. குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான அந்தக் குழு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு இதோ...

ட்ரை பண்ணி பாருங்க…கூந்தலை நேராக்க!!!!!!!!


                 புகைப்படம்: கூந்தலை நேராக்க வேண்டுமா? இத ட்ரை பண்ணி பாருங்க… 

பண்டிகை நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரும் நன்கு அழகாக இருக்க வேண்டும் என்று பல உடல் பராமரிப்புகள், கூந்தல் பராமரிப்பு என்று செய்து வருவார்கள். ஏனெனில் அப்போது நன்கு அழகாக இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் சிலரது முடியானது சுருட்டையாக, அடங்காமல் இருக்கும். இதனால் பெரும்பாலானோர் கூந்தலை நேராக்க ஐயர்னிங் மற்றும் கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்துவார்கள்.

ஏனெனில் இந்த உலகில் தனக்கு இயற்கையாக இருக்கும் கூந்தலை யாருக்கு தான் பிடிக்கிறது. அதிலும் சுருட்டை முடி இருப்பவர்கள் தான், இந்த மாதிரியான கூந்தலை நேராக்கும் சிகிச்சைகள் பலவற்றை மேற்கொள்வார்கள். இதற்கு காரணம் சுருட்டை முடி இருப்பவர்களுக்கு கூந்தலை பராமரிப்பது மிகவும் கடினமாக இருக்கும். அவர்கள் வெளியே எங்கேனும் செல்ல வேண்டுமெனில், தலை சீவுவதற்காகவே ஒரு மணிநேரத்தை செலவிட வேண்டும். இதற்காகத் தான் அவர்கள் கூந்தலை நேராக்க முயல்கின்றனர். ஆனால் கூந்தல் நேராவதற்கு செயற்கை முறையை கையாண்டால், கூந்தல் உதிர்தல், வெடிப்புகள், வறட்சி என்று பல பிரச்சனைகள் கூந்தலில் ஏற்படும்.

எனவே இத்தகைய பிரச்சனைகள் வராமல் கூந்தலை நேராக்க வேண்டுமென்று நினைத்தால், அதற்கு ஒரே வழி இயற்கை முறை தான். இந்த இயற்கை முறையால் கூந்தல் நன்கு வலுபெறுவதோடு, ஆரோக்கியமாக, பொலிவோடு காணப்படும். இப்போது கூந்தலை நேராக்க எந்த மாதிரியான ஹேர் பேக்குகளை போட வேண்டுமென்று பார்ப்போமா!!!

வாழைப்பழம் மற்றும் பப்பாளி பேக்

வாழைப்பழம் மற்றும் பப்பாளியை நன்கு மசித்துக் கொண்டு, அதில் சிறிது தேனை சேர்த்து கலந்து, பின் அந்த கலவையை கூந்தலில் தடவி காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். குளித்தப் பின் கூந்தல் காய்ந்ததும், கூந்தலை சீவிப் பாருங்கள், கூந்தல் நன்கு நேராக காணப்படும். அதிலும் இந்த ஹேர் பேக்குகளை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், கூந்தல் விரைவிலேயே நேராகிவிடும்.

மூல்தானி மெட்டி மற்றும் அரிசி மாவு

ஒரு கப் மூல்தானி மெட்டியுடன், 5 டீஸ்பூன் அரிசி மாவு மற்றும் ஒரு முட்டையின் வெள்ளைக் கரு ஊற்றி, நன்கு அடித்து, சிறிது தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் கூந்தலுக்கு வெதுவெதுப்பாக எண்ணெயை காய வைத்து, தலைக்கு சிறிது நேரம் மசாஜ் செய்து, பின்பு இந்த கலவையைத் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இந்த செயலை மாதத்தில் ஒரு வாரத்திற்கு தொடர்ந்து செய்து வந்தால், கூந்தல் சீக்கிரம் நேராகிவிடும்.

தேங்காய் மற்றும் எலுமிச்சை சாறு

ஒரு தேங்காய் முழுவதையும் நன்கு அரைத்து, பால் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் எலுமிச்சை சாற்றை விட்டு, ஃப்ரிட்ஜில் க்ரீம் போன்று ஆகும் வரை வைக்க வேண்டும். பிறகு அந்த க்ரீம் கலவையை கூந்தலுக்கும், ஸ்கால்ப்பில் படும்படியும் தடவி, ஒரு துணியால் 1 மணிநேரம் கட்டிக் கொண்டு, பின்னர் குளிக்க வேண்டும். இந்த மாதிரி வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால், கூந்தல் இயற்கையாகவே நேராகிவிடும்.

நெல்லி பவுடர், சீகைக்காய் மற்றும் அரிசி மாவு

ஒரு பெளலில் அரை கப் நெல்லிக்காய் பவுடருடன், அரை கப் சீகைக்காய் மற்றும் அதே அளவு அரிசி மாவையும் எடுத்துக் கொண்டு, அதில் இரண்டு முட்டையின் வெள்ளைக் கருவை ஊற்றி, நன்கு பேஸ்ட் செய்து கொண்டு, கூந்தலில் தடவி, குறைந்தது ஒரு மணிநேரத்திற்கு மேல் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து வாரத்திற்கு இரண்டு முறை செய்தால், கூந்தல் நன்கு நேராக பட்டுப்போன்று மின்னும்.

கண்டிசனர்

மற்றொரு வழியென்றால், கடைகளில் விற்கும் கண்டிசனர் தான். இந்த கண்டிசனர் கூட கூந்தலை நேராக்கும். ஆகவே தலைக்கு ஷாம்பு போட்டு குளித்தப் பின்பு, கூந்தலுக்கு கண்டிசனரை தடவி சிறிது நேரம் கூந்தலுக்கு மசாஜ் செய்து, பின் அலச வேண்டும்.

கூந்தலை நேராக்க வேண்டுமா? இத ட்ரை பண்ணி பாருங்க… 

பண்டிகை நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரும் நன்கு அழகாக இருக்க வேண்டும் என்று பல உடல் பராமரிப்புகள், கூந்தல் பராமரிப்பு என்று செய்து வருவார்கள். ஏனெனில் அப்போது நன்கு அழகாக இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் சிலரது முடியானது சுருட்டையாக, அடங்காமல் இருக்கும். இதனால் பெரும்பாலானோர் கூந்தலை நேராக்க ஐயர்னிங் மற்றும் கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்துவார்கள்.